சரக்கும், சைடுடிஷ்யூம், வாழ்க்கை தத்துவமும்


சரக்கும், சைடுடிஷ்யூம், வாழ்க்கை தத்துவமும்

onion pakodaபோன சனிக்கிழமை மதியம் அண்ணன் ஜே.வி திடீர்ன்னு என் மொபைல்ல அழச்சி “நம்ம பிரசன்னா பாண்டிக்கு போயிட்டு வந்தப்போ ஒரு பாட்டில் க்லேன்பிட்டிய்ச் ஸ்காட்ச் வாங்கியான்தான், அத இன்னிக்கி கச்சேரி வெச்சிக்கலாம்ன்னு நேனைக்கறோம். நைட்டு ப்ரீயா இருந்தா இந்த பக்கம் வரீளா’ன்னாறு”. சரி பெரியவா கூப்பிடுறாரெ ஒரு எட்ட போயிட்டு தான் வந்துடுவோம்ன்னு நானும் “சரி அண்ணே வந்துடுரேன்”னேன். சாயங்காலம் கிளம்புறதுக்கு முன்னாடி அண்ணனுக்கு மறுபடியும் ஒரு போன்’ன போட்டு “அண்னே என் பங்குக்கு எதாவது சைடு டிஷ்ஷு வாங்கியாரவா?ன்னு” கேட்டதுக்கு அண்ணன் ஜோதி பெருந்தன்மையாக “உன் விருப்பம்”ன்னு சொல்லி போன்’ன கட் பண்ணிட்டாரு. செரின்னு நானும் கொஞ்சம் வெங்காய பகோடாவும் (சுட-சுட), வருத்த முந்திரியும் வாங்கிட்டு அண்ணன் வீட்டுக்கு போயி சேர்ந்த போது மணி எட்டு இருக்கும்.

“வாயா வா, கரெக்ட்டா டைம்க்கு வந்துட்டே” என்று அன்பாக வரவேற்று என்னை உள்ளே அழைத்துச் சென்ற அண்ணன் என்னை அவர் அருகில் அமர்த்தி எனக்கும் ஒரு கிளாஸ் ஸ்காட்ச் ஊத்தி “போதுமா? கூட சோடாவா பெப்சியா?”ன்னு பாசமா கேட்டாரு. “பெப்ஸியே போதும் அண்னே”ன்னு சொல்லி அவர்ட்ட இருந்து அத வாங்கிகிட்டேன். ஜோதி அண்ணனும் நண்பர் பிரஸ்ஸும் கடமையே கண்ணாயிரமாக வேலைய பார்த்துகிட்டு இருந்தாங்க அடுத்த ஒருமணி நேரமும். நண்பர் பிரசன்னா இளங்கன்று பயம் அறியாது கனக்கா மட மடன்னு குடிச்சிட்டு இருந்தாறு வேற எத பத்தியும் கவலைப்படாம வாய திறந்து ஒரு வார்த்த கூட பேசாம.

இவங்க இப்படி தான் குடிப்பாங்க போல நம்மள மாதிரி கலகலப்பாக குடிக்கற ஆளுங்க இல்ல போலன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா வெறுமனே சய்லேண்ட்டா குடிக்கற டைப்பு நான் இல்லங்கறதால பார்த்து கிட்டே இருந்து கொஞ்சம் பிரேக்கு வந்ததும் (குடிக்கறதுல) மெல்ல நான் கேட்டேன் “அண்ணே ஏதோ குறையரா போல இருக்கில்ல?” ஜோ அண்ணனும் ஆமா’ன்னு தலைய தலைய ஆட்டி “சரக்குக்கு சைடு டிஷ்ஷு செட் ஆகல’ன்னு நறுக்குன்னு சொன்னாரு ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கணக்கா. இத்தனைக்கும் அங்கே நான் கொண்டு போனது போக ஏற்கனவே முட்டை தோசை, முட்டை ஆம்லெட், பரோட்டா’ன்னு ஏகத்துக்கு ஐட்டம் இருந்திச்சு. யோசிச்சுப் பார்த்தால் சரக்கவிட சைடு டிஷ்ஷு தான் அங்க ஜாஸ்தியா இருந்திச்சு.

நான் மெல்ல அண்ணன்ட்ட கேட்டேன் “அண்ணே நம்மல்லாம் காலேஜ் படிச்ச காலம் ஞாபகம் இருக்கா? ஹாஸ்டல்ல பிரண்டுஸு ரூம்ல உட்கார்ந்து சரக்கு அடிச்ச காலத்துலே சரக்கு வாங்க தான் காசு இருக்கும், சைடு’க்கு வெறும் கடளையும், சிப்ஸ்ஸும்தான். ஆனா அதுவே நச்சுன்னு செட் அகும்ல இப்போ ஏன் அண்ணே இப்படி?ன்னு” கேட்டதுக்கு அண்ணன் ஜோதி ஒரு ஏப்பம் விட்டுட்டு சொன்னாரு “அதாம்பா வாழ்க்கை. கெடைகறப்போ அதடோ அருமை தெரியாது போன பின்னாடி தான் பீல் பன்னுவோம். எல்லாத்துக்கும்”ன்னு சரக்க வெச்சு ஒரு தத்துவ மொழி சொன்னாரு.

jo and me

அண்ணனும் நானும்

அட இவருக்கு ஏறிடுச்சு போல அப்போ இன்னும் கொஞ்சம் அவரு வாய கெலரி பார்ப்போம்னு அடுத்து கேட்டேன் “எனக்கு புரியல்லே. நீங்க எத பத்தி அண்ணே சொல்றீங்கன்னு” அப்பாவி தனமா முகத்த வெச்சிக்கிட்டு. அவரும் நல்ல ஒரு புல் கிளாஸ்ஸ ஒரே கல்ப்பு’ல அடிச்சிட்டு அமைதிய என்ன பார்த்து சொன்னாரு “நீ எத பத்தி கேட்டியோ அதப்பத்தி தான் தம்பி’ன்னு”. ஆகா மணுசன் உஷாரா தான்யா இருக்காருன்னு அவரு வாய கெலர்ர வேலைய விட்டுட்டு நானும் என் வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

அப்போ அவரு பதிலுக்கு எனக்கு ஒரு பிட்டு போட்டு பார்த்தாரு “நீ நல்லா படிச்சிருக்க, நல்ல வேலையில்ல இருக்க ஆனா நீ ஏன்பா இன்னும் கலியாணம் கட்டிக்காம காலத்த கடத்துறே, சீகெரம் கட்டிடா தானே வாழ்க்கையை ரசிச்சு ருசிச்சு என்சாய் பண்ண முடியும்’ன்னாரு”. நான் மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டென் “யோவ் எனக்கேவா? ரெண்டு ரவுண்டு அடிச்சிட்டா எல்லா மேட்டர்ரும் ஒளரிடுவோமா என்ன?. நாங்க இன்னும் பால் குடிக்கற கொழந்த இல்ல அப்பு’ன்னு” என் உள் மனசுல நெனைச்சிக்கிட்டு அவரு பாணியில்லேயே அவருக்குப் புரியறமாதிரி பதில் சொன்னேன் “அண்ணே இங்க சரக்குக்கு இத்தன சைடு இருந்தும் கூட சரியா அமையலன்னு பீல் பண்றீங்களே. இது ரெண்டு மணிநேரம் கூத்துதானே? வாழ்க்கை எத்தன வருஷ விவகாரம்? அதுக்கு சரியான சைடு தேடவேனாமா? அவசர படலாமா” ன்னு ஒரே போடா போட்டேன். மனுசன் நம்மல நல்லா உத்து பார்த்துட்டு கம்முனு மறுபடியும் சரக்கு அடிக்க போயிட்டாரு.

ஆக மொத்தம் இதனால்ல என்ன தெரிஞ்சுச்சுன்னா ரெண்டு மணி நேரம் சரமாரியாக சரக்கு அடிச்ச பின்னாடியும் ரெண்டுபேரும் இவளோ அலெர்ட்டா வாய விடாம பேசி இருகிறோம்னா தப்பு சைடு டிஷ் மேல மட்டும் இல்ல- அந்த சரக்கும் செரியில்ல. சரி தானே மக்களே? நீங்க என்ன நினைக்கரீங்க?

 

Advertisements