காதலை பிரிப்பது எப்படி- பிரிண்ட்ஸ் கிட்ட கேளு.
நெத்து நம்ம நன்பர் நக்கல் கண்ணன்னின் காதல பிரிச்சிட்டாங்க ஒரு சதி கும்பல். உங்கலுக்கே தெரியும் நம்ம நன்பர் செம்ம நக்கல் பார்ட்டின்னுட்டு அவருக்கு காதல் பூக்கறதே கஷ்டம். அதயும் மலர்ரதுகுல்ல பிரிச்சு மேஞ்சிட்டாங்க. அவரு எதேச்சையா ஏதோ ஒரு கமெண்ட்டு போட அத வெச்சி இவனுங்க நக்கல் அடிக்க அது பார்த்து அந்த புள்ள அரண்டு மிரண்டு நம்மக்கு எதுக்குடா இந்த பிரச்சனன்னு ஒரே பல்டி அடிச்சு நம்ம நக்கல் நாயகன “அண்ணே’ன்னு” ஒரே போடா போட்டுடுச்சு. எனக்கு இத பார்த்த உடனே ஒரே பீலிங்க்ஸ் ஆகிடுச்சு – என் ப்ளாஷ்பேக் எல்லாம் ஞாபகம் வந்துடிச்சு. அவன் அவன் உயிர பணையம் வெச்சு தலகீழ பல்டி அடிச்சு வாழ்க்கையில செட்டில் ஆக முயற்சி பண்றான்னு விடாம ஒரு நிமிஷத்துல் சட்டுன்னு வெட்டி உட்டுடுராணுங்கலே இவங்கெல்லாம் காதலியோட லவ்ஸ் பண்லா? அப்போ ஏன்யா இந்த பொழப்பு?
நானும் என் கல்லூரி வாழ்க்கையில இந்த மாதிரி பல வல்லூரூகள சந்திச்சு இருக்கேன். அவனுங்களும் திங்க மாட்டான்நுங்க நம்மளையும் அண்ட உடமாட்டாநுங்க. என் கல்லூரி வாழ்க்கையில ஒரு வில்லன் இருந்தான் – பேரு குட்டி ஷியாம் (எங்க கிளாஸ்ல இன்னோரு நெட்ட ஷியாம்மும் இருந்தான்). நான் ரொம்ப நாளா மானசீகமா காதலிச்சு சொல்லணும் சொல்லணும்ன்னு ஒரு நல்ல டைம் தேடிக்கிட்டிருந்த என் டிரீம் கேர்ள் ஆண்ட திடீர்ன்னு ஒரு நாள் கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் கத்தி சொல்லிட்டான் “மச்சி இன்னிக்கி உன் ஆளோட பர்த்டே, இன்னிக்காச்சும் தைரியமா ப்றோபோஸ் பண்ணுடான்னு” ஒரு கத்து கத்துனான். அத்தொட அந்த பிரியா பொண்ணு ஷுட்ட்டர்ர இழுத்து மூடிட்டு என்ட்ட பேசறதயே கட் பண்ணிட்டா. ஏன்டா மகனே(………மகனே) இப்படி பண்ணன்னு செவ்வுல்ல ரெண்டு விட்டு கேட்ட “மச்சான் நான் உன்னக்கு ஹெல்ப் பண்ணதாண்டா அப்படி பண்ணேன்ன்னு” நா கூசாம பொய்யி சொன்னான். சனியன் தொலையாரன்னு விட்டுட்டென். அதுல இருந்து எந்த பிரிண்டு ஹெல்ப்’நாலும் கை எடுத்து கும்பிட்டு வேணாம்யா விட்டுடு, இந்த உடம்பு தாங்காதுடான்னு சொல்லிடறேன்.
ஆக மொத்தம் இது மூலமா நான் என்ன சொல்ல வரேன்னா மக்களே. அவன் அவனுக்கு அவசரமா வந்தா அவன் தான் போயாகணும். அதே போல அவன் அவனுக்கு காதல் வந்தா அவன் தான் அத சொல்லியாகணும். நீங்க முந்திக்காதிங்க பாஸ் அவன் சார்புல. விட்ருங்க. நீங்க ஜெய்ச்சவங்க. நாங்க இனிமே தான் ஜெயிக்க வேண்டியவங்க. எங்களையும் வாழவிடுங்க ப்ளீஸ். உங்க ஹெல்ப்பும் வேணாம் ஒண்ணும் வேணாம். நாங்க பார்த்துக்கறோம். நாங்களே சொல்லிகிறோம் இல்லா சொதப்பிக்கிறோம்- நீங்க நடுவ்வுல்ல பூந்து பிரிக்க வேணாம். நட்புக்கு இலக்கணம் அது இல்ல. நீ வாழு எங்களை வாழவிடு- ஓகே’வா நண்பா?
“Nīṅka jeyccavaṅka. Nāṅka iṉimē tāṉ jeyikka vēṇṭiyavaṅka. Eṅkaḷaiyum vāḻaviṭuṅka pḷīs. Uṅka helppum vēṇām oṇṇum vēṇām. Nāṅka pārttukkaṟōm. Nāṅkaḷē collikiṟōm illā cotappikkiṟōm- nīṅka naṭuvvulla pūntu pirikka vēṇām. Naṭpukku ilakkaṇam atu illa. Nī vāḻu eṅkaḷai vāḻaviṭu- ōkē’vā naṇpā?”
Deivamae neenga engeyo poyutenga 🙂
live and let live, right mahesh? if your quota is already over – you should just move on and not put obstacles for those still writing exams and waiting for results….something which a lot of our guys do