பிஈசா-2: வில்லா – ஒரு ஆராய்ச்சி


பிஈசா-2: வில்லா – ஒரு ஆராய்ச்சி Pizza-2-The-Villa-Theartical-Trailer

ஒரு சில படம் – நாம படம் பார்த்து வெளியே வந்ததும் மறுபடியும் டிக்கெட்ட வாங்கிக்கிட்டு திரும்ப உள்ள போயி இன்னோரு தரம் பார்க்கணும்ன்னு தோணும். சமிபத்தில் நான் பார்த்த பிஈசா-2:வில்லா அப்படியொரு படம். எதுக்கு உடனே டிச்கெட்ட வாங்கிக்கிட்டு மறுபடியும் பார்க்கணும்னா- இன்னொரு தடவ பார்த்தாலாவது ஏதாவது புரியுதான்னு பார்க்கதான். அப்பவும் ஒண்ணும் புரியலன்னா அது மணிரத்தினம் படம்னு கணக்குல எழுதி விட்டுடன்னும்- மறுபடியும் மறுபடியும் ஆராய்ச்சி பண்ண கூடாது. அப்படித்தான் இருந்திச்சு வில்லாவும்.

ஒரு சபிக்கப்பட்ட வீடு- அதுல ஒரு பிரெஞ்சுகாரன் மந்திரம் செஞ்சிருக்கான். அத வாங்குற நாசர் ஒரு ஓவியர்- அவர் வரையறது எல்லாம் அப்படியே நடக்குது – கடைசிலே அது அவர் பையன் உயிரையே பலி வாங்கிடுது. இதான் கதைன்னு நினைக்கிறேன்- இல்லன்னா திட்டாதீங்க- எனக்கு அவ்ளோ தான் புரிஞ்சிது. இதுல டைரக்டர் டச்சு நாம பாராட்டியே ஆகனும்- ஒரு ஓவியம் காட்ராங்க- அதுல சிவப்பும் நீலமும் நாலு லைன் தான் தெரியுது – ஆனா ஹீரோக்கு மட்டும் அது கரெக்டா புரியுது – அது ஒரு நடக்க போற கொலைய காட்டுதுன்னு – உடனே அவர் தான் தான் அந்த கொலைய செய்ய போறோம்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு முன்னாடியே தற்கொலை பண்ணிக்கிறாரு. சத்தியமா ஆடீயன்சு யாரும் இந்த ட்விஸ்ட்ட எதிர் பார்த்திருக்க மாட்டாங்க- அதான் திகில் படம், இல்லையா?

இது எனக்கு எது ஞாபகபடுத்துன்னா – காலேஜில்ல படிக்கறப்போ எக்ஸாம்ல மனுஷன் படம் வறைவோம் – அதுக்கு ரெண்டு கை ரெண்டு காலு ஒரு தல மட்டும் தான் இருக்கும் – ஆனா அத வெச்சிட்டு எங்க வாத்தியார் எனக்கு மார்க்கு போடுவாரு (எனக்கும் ஆச்சரியம் தான், என்ன செய்ய) – அந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் இந்த மாதிரி திகில் படம் புரியும் போல.

இது புரிஞ்சா பத்து மார்க்

இது புரிஞ்சா பத்து மார்க்

நாங்கெல்லாம் அந்த அளவுக்கு வொர்த் இல்லை- நாங்க கேட்கறது எல்லார்க்கும் புரியற மாதிரியான ஒரு சாதா தமிழ் படம்ங்க –உங்க அதிமேதாவிதனத்தை எல்லாம் காட்டி எங்களை குழப்புனீங்க – அவ்வளோதான் எங்கள மாதிரியான “சாதா” சினிமா ரசிகர்கள் “விட்றா இத தீபாவளி/பொங்கலுக்கு டிவியில் பார்த்துபோம்”ன்னு வீட்ல இருந்துடுவோம். ஓகே’வா?

Advertisements

2 thoughts on “பிஈசா-2: வில்லா – ஒரு ஆராய்ச்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s