பாண்டிய நாடு – திரை விமர்சனம்


பாண்டிய நாடு – திரை விமர்சனம்

15494_thumb_665நேற்று எக்ஸ்பிரஸ் அவெனுவில் உள்ள ஈஸ்க்கேப் திரையரங்கிர்க்கு நண்பர் கோபால கிருஷ்ணருடன் சென்றிருந்தேன்- தல அஜீத்தின் தீபாவளி ரிலீஸ் படம் “ஆரம்பம்” பார்க்க. ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. என்னடா கிளம்பி இவ்வளவு தூரம் வந்து விட்டோமே, அதுவும் நண்பரின் பிறந்த நாளாச்சே வெறும் கையோடு போவதையும் விட டிக்கெட் கெடைக்கும் வேறு எந்த படத்திற்க்காவது போலாமென்று விஷால் நடித்த “பாண்டியநாடு” படத்திற்க்கு டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்தோம்.

படத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது, விமர்சனமும் படிக்கவில்லை, அதலால் முற்றிலும் ஒரு புது அனுபவம் தான் எதிர்பார்த்தோம். எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் நிறைவேற்றிவிட்டார் இயக்குனர் சுசீந்திரன். ஒரு நடுத்தர வர்க குடும்பம், பாசக்கார பெற்றோர், காதல் செய்வதிலேயே முனைப்பாக இருக்கும் மகன், அவனுக்கு உறுதுணையாக நண்பர்கள் என்று போன படத்தை – நான் மகான் அல்ல- படத்தை முற்பாதி ஞாபக படுத்தினாலும் இடைவேளைக்கு பின் கதை பெய்துக்கொண்டு ஓடுகிறது.

விஷாலின் அண்ணன் மற்றும் நண்பன் – விக்ராந்த் கௌரவ வேடத்தில்- தொடர் மரணங்கள் (அறிமுக வில்லன் ஷரத்தின் கையால்) பயந்தாங்கொள்ளி ஹீரோ விஷாலை சண்டக்கோழி விஷாலாக மாற்றுகிறது. வீறுகொண்டு ஹீரோ ஒரு பக்கம் வில்லனை போட்டு தள்ள மாத கணக்கில் தொடர்ந்து கட்டம் போட்டு கொண்டிருக்க மறுபக்கம் மூத்த மகன் சாவிற்கு காரணமானவர்களை பழிவாங்க தந்தை பாரதிராஜா வெளியூர் கூலி படையை ஏவ படம் விறுவிறுப்பாக செல்கிறது கிளைமாக்ஸ் நோக்கி. கடைசியில் வில்லனை உயிருடன் புதைத்து தன் வஞ்சத்தை தீர்த்துக் கொள்கிறார் ஹீரோ.

சாதா மசாலா கதை தான் என்றாலும் திரைக்கதையை பட்டை தீட்டி நமக்கு அலுப்புத் தட்டாமல் எடுத்து செல்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஒரு மாஸ் ஹீரோ விஷால்லை காதலியை கேலி சேய்யும் ரவுடிகளிடம் சண்டை போட தன் நண்பனை அழைத்து வரும் அளவிற்கு கோழையாக காட்டி இருப்பது நல்ல டச்ச். அதேபோல் கிளைமாக்ஸ் சண்டையிலும் ஹீரோ கராத்தே, குங்பூ எல்லாம் கட்டாமல், கைக்கு கெடைய்த்ததை எடுத்து அடிக்கும் சராசரி மனுஷனாக காட்டியது வரவேற்கத்தக்கது,

இசை சுமார்தான்- அந்த முதல் “ஒப்பாரி” பாட்டை தவிர. விஷாலின் தந்தையாக நடிக்கும் இயக்குனர் பாரதிராஜா, நண்பர்களாக நடிக்கும் விக்ராந்த் மற்றும் பரோட்டா சூரி கொடுத்து பாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள். விஷாலின் அண்ணி வேடத்தில் வரும் நடிகை சிறு பாத்திரமாக இருந்தாலும் நம்மை நெகிழ வைய்கிறார். தேவையில்லாத ஒரு சில டூயட் பாட்டுக்கள்தான் அங்ககங்கே தலை நுழைத்து கதையை தடை செய்து ஆடீயன்சை வெருப்பெற்றுகிறது.

தீர்ப்பு : பாண்டிய நாடு– கட்டாயம் ஒருமுறை பார்க்க வேண்டிய படம்– 4/5

Advertisements

2 thoughts on “பாண்டிய நாடு – திரை விமர்சனம்

  1. Barring the ridiculous fai fai kalaichifai song that was needless the movie was good – the scenes between vishal and his niece, vishal and bharathiraja and the killing attempt at coonoor were well done. The scene where Vishal saves his father in Madurai bus-stand / market was also well-done!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s