சென்னையில் ஒரு ஆட்டோ ட்ரிப்……..


சென்னையில் ஒரு ஆட்டோ ட்ரிப்……..

An Auto-Rickshaw in Chennai

An Auto-Rickshaw in Chennai

சென்னையின் ஆட்டோ ஓட்டுனர்களை பற்றி முகநூலில் பல பாராட்டுகளைப் படித்து விட்டு என்னோட அனுபவங்களையும் எழுத தோணியது.

அன்மையில் கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் மெயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலையில் வந்து இறங்கிய நான் அண்ணா நகரில் உள்ள என் வீட்டுக்கு செல்ல முற்பட்ட போது ஒரு உன்மையை கண்டறிந்தேன். அது- நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வயத்தார் போல எவ்வளவு தான் மீட்டர் ரேட்டை அரசு ஏற்றினாலும் ஆட்டோ ஓட்டுனர்கள் திருந்தும் வாய்பேயில்லை என்பது தான்.

“அண்ணா நகர் போகனுமா? ரூபாய் ஏறநூற்று ஐயம்பது {Rs.250 } குடுங்க” யென்று கேட்ட ஆடோகரர் இடம் “என்னது? நான் எப்பவும் என்பது இல்லை நூறு மேலே குடுத்ததில்லையே” யென்று சொல்ல அவர் என்னை முறைக்க டென்ஷன் ஆனா நான் “ஏதோ Rs.150 என்றல் பரவாயில்லை எடுத்து எடுப்பில் ஒரேயடியா Rs.250 கேட்கறீங்க” யென்று நான் கேட்டதுக்கு அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் என்னை அதிர்ச்சியுடன் பார்த்து “Rs.150 இப்பல்லாம் மீட்டர் ரேட்டு தெரீயுமா?” என்று கேட்டனர்.

ஏதோ மீட்டர் ரேட்டுக்கு சவாரி சென்றால் அவமானத்தில் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் போல பேசினார்கள். இது தான் உண்மை நிலை இன்றும் சென்னை ஆட்டோகளை பொறுத்தமட்டில். நம்பவில்லையென்றால் சென்ட்ரல்லுக்கோ இல்லை எக்மோர்ருக்கோ சென்று பார்க்கவும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் முன்தினம் கொச்சியில் அதே அண்ணா நகர் தொலைவிற்கு ஆட்டோவில் சென்றடைய மீட்டர் Rs.26 ரூபாய் தான் வந்தது. நான் Rs. 30 ரூபாய் குடுத்ததும் ஆட்டோ ஓட்டுனர் எனக்கு சில்லறை நான்கு ரூபாய் திருப்பிக் கொடுத்தார். என் கண்ணில் ஆனந்த் கண்ணீர் வராத குறை.

ஆக ஆட்டோ ஓட்டுனர்களில் சில நல்லவர்களும் இருக்கிறர்கள். ஆனால் அவர்கள் சென்னையில் தான் இல்லை.

Advertisements

2 thoughts on “சென்னையில் ஒரு ஆட்டோ ட்ரிப்……..

  1. Congrats Ganesh 🙂 calls for a celebration 🙂

    Google translate of the post was hilarious 🙂 – ultimately you reached home safely 🙂 look forward to a detailed post of your Kochi trip 🙂

    • hhhaaaahaa…now you have pricked my curiosity- i too want to read how it sounds on google….or maybe i should have done the translation to english by myself and posted it below?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s